Homeசெய்திகள்சென்னைமோகன் நடராஜன் மறைந்த செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது - டி. ராஜேந்தர்...

மோகன் நடராஜன் மறைந்த செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது – டி. ராஜேந்தர் M.A

-

கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது.

டி. ராஜேந்தர் M.A – மோகன் நடராஜன் மறைந்த செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியதுமறைந்த இயக்குனர் வேந்தன் பட்டி அழகப்பன் இயக்கத்தில் நான் பாடல்கள் எழுதி இசையமைத்து தாங்கள் தயாரித்த படம் பூக்களை பறிக்காதீர்கள்.

இந்த மண்ணை விட்டு மறைந்து எங்கள் மனதை வருத்தாதீர்கள். இதயம் தாங்கவில்லை, துக்கம் தாளவில்லை. கண்ணீர் பூக்களால் அஞ்சலி செலுத்துகிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மோகன் நடராஜன்,

MUST READ