குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இப்ராஹிம் வயது 21 உயிரிழப்பு.
பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் சிவபாரதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் நேர்ந்த விபரீதம்.
தென்காசியை சேர்ந்த இப்ராஹிம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஏ ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வடபழனி அழகிரி நகர் வசித்து வரும் சிறுவயது நண்பர் வெள்ளை பாண்டி என்பவரை பார்ப்பதற்கு சென்னை வந்துள்ளார்.
அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பர் சிவபாரதி என்பவர்ருடன் மது அருந்தியுள்ளார். பின்னர் அண்ணா நகர் சரவண பவன் அருகே பிரியாணி கடை நடத்தி வரும் மற்றொரு நண்பர் விஷ்ணுவை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அமைந்தகரை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே இப்ராஹிம் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.