Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

-

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது. சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.51 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, கிராம் வெள்ளி ரூ.6,450க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் ரூ.1 குறைந்து, கிராம் ரூ.90க்கு வர்த்தகமாகிறது. மேலும் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 90 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது.

 

 

MUST READ