Homeசெய்திகள்சென்னைகலைஞர் நூற்றாண்டு பூங்கா: 27 நாட்களில் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்

கலைஞர் நூற்றாண்டு பூங்கா: 27 நாட்களில் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்

-

- Advertisement -
kadalkanni

சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவை 27 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பார்வையிட சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 27 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரையிலான தீபாவளி விடுமுறையில் மட்டும் 40 ஆயிரம் பேர் பூங்காவை பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ