spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமெட்ரோ ரயில் பணிகள்: போக்குவரத்து மாற்றம் - சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

மெட்ரோ ரயில் பணிகள்: போக்குவரத்து மாற்றம் – சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

-

- Advertisement -

மெட்ரோ ரயில் பணிகள்: போக்குவரத்து மாற்றம் -சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம்

சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வாணுவம்பேட்டை – மேடவாக்கம் கூட்ரோடுக்கு இடையே  மற்றும் கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, அப்பகுதியில் சென்னை மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்களைச் செய்து போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது . மேலும் இந்த மாற்றங்கள் இன்று (24.07.2024) முதல் நடைமுறைக்கு வருகின்றன.  இவ்வழி தடத்தில் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

தற்போது கீழ்கட்டளையில் இருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் (18பி, 18டி, எம்1, 45ஏசிடி) இன்று முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கைவேலி வழியாக இயக்கப்படுகின்றன.

மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்டு வரும் பேருந்து (14எம்) இன்று முதல் மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக கிண்டி ரயில் நிலையத்துக்கு இயக்கப்பட உள்ளது. மேலும், மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து கீழ்கட்டளை (எஸ்14எம்), மடிப்பாக்கம் கூட்ரோடு வாணுவம்பேட்டை வழியாக என்.ஜி.ஓ.காலனி பேருந்து நிலையத்துக்கு 14எம் வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கீழ்கட்டளை பேருந்து நிலையத்தில் இருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்துக்கு (எம்1சிடி) 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) மினி பஸ்கள்  இயக்கப்படுகின்றன. மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் (வி51, வி51எக்ஸ், 76, 76பி,) இன்று முதல் மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்படுகின்றன.

வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை

கீழ்கட்டளையில் இருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் எம்18சி, 18என் மற்றும் என்45பி  மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்படுகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ