புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 252 பேர் வழக்கு பதிவு செய்து 276 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
24 பேர் மீது அதிவேகமாக வாகனத்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 22 பேர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததாக 65 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
சென்னை மாநகரம் முழுவதும் மொத்தமாக 276 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.