Homeசெய்திகள்சென்னைஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

-

ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவற்ற நிலையிலும், அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து சீராக உள்ளது. இதனால் குற்றாலம் பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருகளில் வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். மேலும் இன்று வார விடுமுறையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக வருகை தந்த சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத நடை திறக்கப்பட்டதை ஒட்டி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில்  நீராடி செல்கின்றனர். இதனால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் அருவிக்கரை களைகட்டி காணப்பட்டது.

MUST READ