Homeசெய்திகள்சென்னைதிருவிக நகர் அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் 50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது :

திருவிக நகர் அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் 50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது :

-

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வசதியுடன் தரம் உயர்த்த படுகின்றன. இதில் அம்பத்தூர், திருவிக நகர் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சென்னையில் குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள சில பேருந்து நிலையங்கள் தரைகள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்து, கழிப்பறைகள் பாழடைந்து காணப்படுகின்றன.இந்த குறைகளை போக்கும் விதமாக திருவிக நகர் ,தண்டையார் பேட்டை ,கண்ணதாசன் நகர், முல்லை நகர் ,பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களை அதிநவீன கட்டமைப்புகளுடன், சகல வசதிகளுடன் தரம் உயர்த்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வசதியுடன் தரம் உயர்த்த படுகின்றன.வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வசதியுடன் தரம் உயர்த்த படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்து உயர் அதிகாரி கூறியதாவது :”வட சென்னையை பொறுத்தவரை சில பேருந்து நிலையங்கள் பழமையானதை கருத்தில் கொண்டு அதனை தரம் உயர்த்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கபட்டிருந்தது. அதன்படி 6 பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை உயர்தர நவீன வசதிகளுடன் கட்டமைத்து தர வேண்டும் என சிமடிஎவிடம் கேட்டிருந்தோம்.நடத்துனர் ஓட்டுநர் பேருந்தில் பயணம், செய்பவர்களின் வசதிக்கு ஏற்ப அதற்கான பணிகள் தொடங்க உள்ளது” என்றார்.

இது தொடர்பாக அதிகாரி கூறியதாவது,” தற்போது அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் , கூரைகள் , சோலார் தகடுகள், தூய்மையான கழிப்பிடம், அமர்ந்திருக்கும் வசதி, சுத்தமான குடிநீர் வசதி ,சிசிடிவி கேமரா வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிரது தற்போது திருவிக நகர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை நிலையங்களுக்கான டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. இதற்கான வளர்ச்சி குழுமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிட கலை வடிவமைப்பாளர்கள் தங்கள் வரைபட பணிகளை செய்து முடித்துள்ளனர்.மேலும் இந்த இரண்டு மட்டும் ௫50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் முடிந்து 2024 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரகூடும் .இந்த நிலையங்கள் நவீன மயமாக்கல் மூலமாக வட சென்னையின் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் ஒன்றாக இத்திட்டமும் அடங்கும்” என்று தெரிவித்தார்.

MUST READ