Homeசெய்திகள்சென்னைமெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு

-

மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு

சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு போராடி வந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நீரில் தத்தளித்து வந்த வாலிபரை உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் நடத்திய விசாரணையில், கடல் அலையில் சிக்கிக்கொண்ட இளைஞர் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(27) என்பதும், நாட்டு மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தினேஷ் குமார் நாட்டு மருந்து கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்த போது, கலங்கரை விளக்கம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு சென்று சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தினேஷ் குமார் கடல் அலையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மெரினா போலீசார் வழக்குபதிவு செய்து, தினேஷ் குமார் சிறுநீர் கழிக்க சென்றாரா அல்லது தற்கொலை செய்து கொள்ள சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ