சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் புதிய தொழில் உரிமம் மற்றும் புதுப்பிக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15.5 லட்சம் வரிபாக்கியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு மாநகராட்சி மண்டலம் 7 வருவாய் துறை அதிகாரிகள் இன்று சீல்வைத்து வருகின்றனர்.

அம்பத்தூரில் சுமார் 3700 வணிக நிறுவனங்கள் மூலம் சொத்து வரி தொகையாக சுமார் 25 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7 க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் உரிமங்கள் கடந்த 3 ஆண்டாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் விநியோகம் செய்து கட்டிட உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டல அலுவலர் ராஜேஸ்வரி அவர்கள் அறிவுறுதலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் பாலச்சந்தர் உதவி வருவாய் அலுவலர் தலைமையில் மூன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிய கடைக்கு சீல் வைத்தனர். ரயில் நிலையம் சாலையில் உள்ள நடேசன் தெருவில் நேமிச்சந்த் என்பவருக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் வணிக வளாகத்தில் 8.9 லட்சம் வரி பாக்கியும், மற்றும் சந்திராபாய் சுரேஷ்குமார் மற்றும் தீபக்குமார் என மொத்தமாக 15 லட்சம் ரூபாய் சொத்துவரி செல்லுத்தாமால் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட அனைத்து கடைகள் உரிமையாளர்கள் உடனடியாக கட்ட வேண்டிய வரிபாக்கி செலுத்தினால் மட்டுமே சீல் அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7க்கு சொந்தமான 3700 வணிக வளாகங்கள் சுமார் 25 கோடி ரூபாய்க்கு வரி பாக்கி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மண்டல அதிகாரி ராஜேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.