சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளையும் மீறுபவர்களை கண்காணிக்க இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.
115 இடத்தில் தற்காலிக சோதனை மையங்கள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை சோதனை.

சென்னையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் பைக் ரேஸ் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது.
சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 107 தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையில் அதிவேகமாகவும் செல்லும் நபர்களை பிடிப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் சென்னை பெருநகர் முழுவதும் 115 தற்காலிக வாகன சோதனை மையம் அமைத்து தீவிர வாகன தணிக்கை சோதனை ஈடுபட்டனர்.
அதேபோல் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இரவு சென்னையில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து போலீஸ் சிறப்பு வாகன தணிக்கை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 7539 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 51 வாகனங்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 176 வாகனங்கள் என மொத்தம் 227 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பேஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர் என்கின்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் காணும் எஃப் ஆர் எஸ் கேமரா மூலம் 3481 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கடந்த இரு தினங்களில் மட்டும் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறி கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் சில தினங்களில் புத்தாண்டு வருகையை ஒட்டி சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்றங்களை குறைக்கவும் தலைமுறை குற்றவாளிகளை கைது செய்யவும் பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களை தடுக்கவும் சென்னையில் உள்ள 107 தனியார் தங்கும் விடுதிகள், மேன்ஷங்கள் என தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.