spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமாணவிகள் புகாரளித்த 3 பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது - மகளிர் ஆணையம்

மாணவிகள் புகாரளித்த 3 பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது – மகளிர் ஆணையம்

-

- Advertisement -

மாணவிகள் புகாரளித்த 3 பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது – மகளிர் ஆணையம்

கலாசேத்ரா பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி முன்னிலையில் காலாசேத்ரா இயக்குனர்ரேவதி ராமசந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டுப் புகார் குழு( ICC கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள மகளிர் ஆணையம் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 40 நிமிடங்கள் விசாரணையானது நடைபெற்றது.

விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, “நாங்கள் விசாரணைக்கு சென்ற போது இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் இல்லாத காரணத்தால் இன்று நேரில் விளக்கம் கேட்க அழைத்திருந்தோம். கலாச்சேத்ரா கட்டமைப்பு குறித்தும் அங்கு படிக்கக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் அவர்கள் ஆஃப்லைன் வழியாக தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அதையும் இயக்குனரிடம் அறிவித்துள்ளோம்.

we-r-hiring

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் இதுவரை பாலியல் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள ஐ சி சி கமிட்டியின் உள்ளிட்டு புகார் குழு அறிக்கையை கேட்டுள்ளோம். மாணவிகள் புகார் அளிக்கவில்லையா என்பது குறித்து அடையாறு கலாச்சியத்ரா ஐசிசி கமிட்டி கொடுக்கும் ஆவணங்கள் அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யப்படும். அதே நேரத்தில் ஏற்கனவே புகார் கொடுத்ததாக கூறப்படும் மாணவிகளிடம் அது தொடர்பான மனு வைத்துள்ளார்களா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று நபர்களும் கல்லூரிக்கு அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளோம். ஐசிசி கமிட்டியை வலுப்படுத்தவும் அடுத்து வரக்கூடிய மாணவிகளுக்கு இந்த கமிட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவித்துள்ளோம்

பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். மாணவிகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். தேர்வு குறித்து மாணவிகளுக்கு இன்று மாலை சுற்றறிக்கை அனுப்பப்படும் என இயக்குனர் கூறியுள்ளார். மாணவிகளின் குறைகளை கேட்டு அறிய குறை தீர்ப்பு குழுவையும் அமைக்குமாறு மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து அடையாறு கலாக்ஷேத்ரா உதவி பேராசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது புகார்கள் மகளிர் ஆணையத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. அனைத்தையும் விசாரித்து, அதிகாரப்பூர்வ சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும்” என்றார்.

MUST READ