Homeசெய்திகள்சென்னைஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு

ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு

-

ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு

ஆடி மாத மூன்றாவது வாரத்தில் காசிமேட்டில் மீன்களின் விலை களை கட்டியது. கடந்த வாரத்தை விட விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் காசிமேட்டுக்கு மீன்களை வாங்க மக்கள் அதிகாலை முதலே வருவார்கள். ஆடிமாத படையலில் முக்கிய உணவாக பங்களிப்பது மீன் வகை உணவுகள் மட்டுமே. ஆதலால் மீன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.

இந்நிலையில் இன்று ஆமாதத்தில் மூன்றாவது வாரம் வீடுகளில் அம்மனுக்கு கூழ் படையல் இடுவதற்காக மீன்களை வாங்க அதிகாலை முதலே காசிமேட்டில் குவிந்தனர். வஞ்சிரம் மீன் கிலோ 900 வரை விற்கப்பட்ட மீன் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு

சங்கரா மீன் ரூ. 450, இறால் ரூ. 450, ஷீலா மீன் ரூ .400, கருப்பு வவ்வால் மீன் ரூ. 1000, வெள்ளை வவ்வால் மீன் ரூ. 1200, கொடுவா மீன் ரூ. 550, டைகர் இறால் ரூ. 1200, நண்டு ரூ.350, கடல் விரால் ரூ. 550, களவான் மீன் ரூ. 450, நெத்திலி மீன் ரூ. 300, கடம்பா மீன் ரூ. 350, சுறா மீன் ரூ.  500, நாக்கு மீன் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இருந்தபோதிலும் பேரம் பேசி தங்கள் தேவைக்கேற்ப மீன்களை வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் மீன் வரத்து கிடைத்ததால் காசிமேட்டில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

MUST READ