இன்றைய (அக் 8) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.90,000த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து 1 சவரன் ரூ.90400க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை இப்படி தடாலடியாக உயர்ந்து கொண்டே போனால் விரைவில் சவரன் ரூ.1,00,000த்தை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் இந்த தொடர் ஏற்றம் நகை வாங்க திட்டமிட்டிருந்த மக்கம் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எங்கே போய் முடியுமோ என்ற அச்சத்தையும் நடுதர மக்களிடையே எற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது. அதன்படி நேற்று விற்பனையான கிராம் ரூ.167 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.1,67,000 ஆக விற்பனையாகிறது.
ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘வா வாத்தியார்’ படக்குழு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!