Homeசெய்திகள்சென்னைவடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

1,933 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.


ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 60 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், 2021 முதல் 2024 வரை சென்னை நகரில் 745 மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக பணிகள் முடிவடையும எனறும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

MUST READ