பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தான் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அக்ஷய் குமார். ஆனால் ரசிகர்கள் அவ்வப்போது இவரை கனடியன் குமார்(Canadian Kumar) என்றும் அழைப்பதுண்டு. ஏனெனில் அக்ஷய்குமாரிடம் தற்போது வரை இந்திய குடியுரிமை இல்லை. அவரிடம் கனடா நாட்டு குடியுரிமை மட்டுமே இருக்கிறது. எனவே ரசிகர்கள் அதை வைத்து அவரை அவ்வப்போது கேலி செய்வதுண்டு.
இந்நிலையில் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்ஷய் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தான் கனடா நாட்டு குடியுரிமைத் துறந்து இந்திய நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய குடியுரிமை பெற்ற ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். இதனால் அக்ஷய்குமார் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். படங்களில் தேசப்பற்று மிக்கவராக நடித்துவரும் அக்ஷய் குமார் தற்போது ஒருபடி மேலே போய் சுதந்திர தினத்தில் தனது தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் செய்துள்ள இந்த செயல் கவனம் பெற்றுள்ளது.
அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் OMG 2 திரைப்படம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்திற்கு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருக்கிறது.