Homeசெய்திகள்சினிமாஅரண்மனை-4 படத்தில் தமன்னா, ராஷிகண்ணா

அரண்மனை-4 படத்தில் தமன்னா, ராஷிகண்ணா

-

- Advertisement -

அரண்மனை-4 படத்தில் தமன்னா, ராஷிகண்ணா

அரண்மனை திரைப்படத்தின் 4-ம் பாகத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் உருவாகும் அரண்மனை 4-வது பாகம்

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால், அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியான நிலையில், 4-வது பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளது. இதில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் காரணமாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என தெரிவித்தனர்.

விரைவில் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், அரண்மனை படத்தின் 4-வது பாகத்தில் நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஏற்கெனவே, நடிகை ராஷிகண்ணா அரண்மனை 3-ம் பாகத்தில் கதாயநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ