Homeசெய்திகள்சினிமாதனுஷ் குரலில் 'ரெட்ட தல' முதல் பாடல்.... வைரலாகும் ப்ரோமோ!

தனுஷ் குரலில் ‘ரெட்ட தல’ முதல் பாடல்…. வைரலாகும் ப்ரோமோ!

-

- Advertisement -

ரெட்ட தல படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தனுஷ் குரலில் 'ரெட்ட தல' முதல் பாடல்.... வைரலாகும் ப்ரோமோ!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ரெட்ட தல. இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. சாம். சி.எஸ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், டிஜோ டாமி இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். ‘தடம்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் இதில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷ் குரலில் 'ரெட்ட தல' முதல் பாடல்.... வைரலாகும் ப்ரோமோ!எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது இந்த ஆண்டுக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring

அடுத்ததாக இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தனுஷ் குரலில் உருவாகி இருக்கும் ‘கண்ணம்மா’ எனும் முதல் பாடல் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ