- Advertisement -
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கிக். இந்தப் படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியிருந்தார். அருண் ஜான்யா இசையமைத்தார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்தார். மேலும் செந்தில், கோவை சரளா மன்சூர் அலிகான், தம்பி ராமையா, ஒய் ஜி மகேந்திரன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் காமெடி கலந்த கதை களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.




