Homeசெய்திகள்சினிமாசெல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்..... கிளம்பிய எதிர்ப்புகள்!

செல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்….. கிளம்பிய எதிர்ப்புகள்!

-

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், செல்பி எடுக்க வந்த ரசிகரை தலையில் அடித்து தள்ளி விட்டார்.செல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்..... கிளம்பிய எதிர்ப்புகள்!பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜாக்கி ஷெராப். கடைசியாக ஜாக்கி ஷெராப் நடிப்பில் மஸ்த் மெய்ன் ரெஹ்னே கா படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் மும்பையில் ஒரு வணிக வளாகத்திற்குள் சென்றபோது ரசிகர்கள் பலரும் ஜாக்கி ஷெராப் ஐக் காண திரண்டு வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ஜாக்கி ஷெராப் அருகில் வந்து செல்ஃபி எடுக்க முயன்றார். அந்த சமயத்தில் ஜாக்கி ஷெராப் அந்த ரசிகரின் தலையில் அடித்து விட்டார். இது சம்பந்தமான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜாக்கி ஷெராப் இன் இந்த செயல் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்..... கிளம்பிய எதிர்ப்புகள்!அதாவது ஒரு சிலர் ஜாக்கி ஷெராப், செல்பி எடுக்க விருப்பமில்லை என்றால் அதனை மறுத்திருக்கலாம். தலையில் அடித்திருக்கக் கூடாது என்று ஜாக்கி ஷெராப் – க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் ஜாக்கி ஷெராப், செல்லமாக அந்த ரசிகரின் தலையில் தட்டியிருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

MUST READ