spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ.... யார் அந்த சீனியர் ஆக்டர்?

‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ…. யார் அந்த சீனியர் ஆக்டர்?

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.'குட் பேட் அக்லி' படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ.... யார் அந்த சீனியர் ஆக்டர்?

அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது அஜித்தின் 63வது படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. சரவெடியாக வெளியான இந்த டீசர் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்தாக அமைந்தது. எனவே ரசிகர்கள் இந்த டீசரை இணையத்தில் வைரலாக்கி வருவதோடு கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 'குட் பேட் அக்லி' படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ.... யார் அந்த சீனியர் ஆக்டர்?அடுத்தது இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் டீசரிலேயே அஜித்தை பல விண்டேஜ் தோற்றங்களில் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். எனவே படம் முழுக்க அஜித்தை எப்படி காட்டியிருப்பார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி சீனியர் ஆக்டர் ஒருவர் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 'குட் பேட் அக்லி' படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ.... யார் அந்த சீனியர் ஆக்டர்?இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த சீனியர் ஆக்டர் விஷால் அல்லது எஸ்.ஜே. சூர்யாவாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தினை மார்க் ஆண்டனி படத்தின் யுனிவர்ஸாக கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அந்த சீனியர் ஆக்டர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

we-r-hiring

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா , சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ