இயக்குனர் விஷ்ணுவரதன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அஜித்தின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதேசமயம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பணியாற்றி வருகிறார் விஷ்ணுவரதன். இந்நிலையில் இவர் மீண்டும் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதன்படி விஷ்ணுவரதன் இயக்கியுள்ள புதிய படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்க அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
So happy to share the title of my new film “NESIPPAYA” A journey of love challenged by destiny. My first collaboration with producer @XBFilmCreators #XavierBritto @SnehaBritto.
It’s @thisisysr again.
The beginning is a new star @_akashmurali & gorgeous @AditiShankarofl pic.twitter.com/4I16fqUqbI
— vishnu varadhan (@vishnu_dir) June 25, 2024
மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்திற்கு நேசிப்பாயா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து அறிவிப்பினை இயக்குனர் விஷ்ணுவர்தன் தனது சமூக வலைதள பக்கத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த வீடியோவின் இறுதியில் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.