- Advertisement -
நடிகர் அஜித்குமார் திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோலிவுட்டில் தல, ஏகே என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். அண்மைக் காலங்களில் நடிப்பு மட்டுமன்றி டிராவல், பைக் ரேஸ் ஆகியவற்றிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். இறுதியாக அஜித் நடிப்பில் விஸ்வாசம், வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து பொங்கலுக்கு வெளியான துணிவு படம் வரவேற்பை பெற்றது.


தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முழு படத்தையும், வெளிநாட்டிலேயே நிறைவு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே அவ்வப்போது சென்னைக்கும் நடிகர் அஜித்குமார் வந்து செல்கிறார்.



