spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!!

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!!

-

- Advertisement -
டெல்லி கணேஷ்
பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், வயது மூப்பு மற்றும்  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். 1844ம் ஆண்டு நெல்லையில் பிறந்த இவர், ஆரம்பக் காலத்தில் இந்திய வான்படையில் பணியாற்றி வந்தார். சுமார் 10 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றி வந்த அவர், தக்‌ஷின பாரத நாடக சபா என்னும் நாடகக்குழுவில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் 1976ம் ஆண்டு பட்டின பிரவேதம் ‘பட்டின பிரவேசம்’படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

டெல்லி கணேஷ்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிப்படங்களில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகர், வில்லன், நகைச்சுவை என கதாப்பாத்திரங்களில் நடித்து தனி முத்திரை பதித்துள்ளார். ‘மைக்கேல் மதன காமராஜ’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அவ்வை சண்முகி’ உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ் இடம்பெற்றுள்ள காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

இளமைக்கலாம் தொடங்கி இறுதிக்காலம் வரை தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வந்த டெல்லி கணேஷ் அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் கடந்த 3 நாட்களாக உடல்நலக்குறைவால் கஷ்டப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ