Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தனுஷின் லைன் அப்!

எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தனுஷின் லைன் அப்!

-

- Advertisement -

நடிகர் தனுஷின் லைன் அப் பற்றி பார்க்கலாம்.எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தனுஷின் லைன் அப்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் சாதாரண கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன் பிறகு தனது கடின உழைப்பினால் நடிப்பு அசுரனாக மாறியுள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவை தாண்டி இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இது தவிர தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்திறமைகளை வெளிப்படுத்தி, பல்வேறு விருதுகளை அள்ளி, புகழின் உச்சியில் நிலைத்து நிற்கும் தனுஷ், காலத்திற்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்து பலரையும் வியப்படைய வைக்கிறார். எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தனுஷின் லைன் அப்!அந்த வகையில் இவர் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 முதல் உலகமெங்கிலும் வெளியாக இருக்கிறது. ‘ராயன்’ படத்திற்கு பிறகு இவர் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.

we-r-hiring

இதற்கிடையில் இவர், பாலிவுட்டில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்கள் எப்படி ரசிகர்களின் பேராதரவை பெற்றதோ அதேபோல் இந்த படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தனுஷின் லைன் அப்!

அடுத்தது தனுஷ், ‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படமானது தனுஷுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தனுஷின் லைன் அப்!

இதனை அடுத்து தனுஷ், ‘அமரன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது 56வது படத்திலும், ஓம் ராவத் இயக்கத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படத்திலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் படத்திலும் நடிக்க உள்ளார் தனுஷ். இதற்கிடையில் வடசென்னை 2, ஆயிரத்தில் ஒருவன் 2, புதிய தெலுங்கு படம் போன்ற ஏகப்பட்ட படங்கள் தனுஷின் கைவசம் உள்ளன. இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ