spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பெப்சி விஜயனின் தாயார் மறைவு

நடிகர் பெப்சி விஜயனின் தாயார் மறைவு

-

- Advertisement -
நடிகரும், ஸ்டன்ட் மாஸ்டருமான பெப்சி விஜயனின் தயாயார் காலமானார். இதை அறிந்த திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவி, பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் நடிகர் பெப்சி விஜயன். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடன இயக்குநராவும் பல படங்களுக்கு அவர் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில், தில், பாபா, இவன், வில்லன், தாகூர், ஆஞ்சநேயா, ஜூட், எதிரி, கிரி சுக்ரன், தாஸ் உள்பட பல படங்களில் அவர் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அஜித் நடித்த வில்லன் திரைப்படத்தில் விஜயனின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

we-r-hiring
சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தில் படத்தில் மச்சான் மீசை வீச்சறுவா என்ற பாடலுக்கு அவர் நடனம் ஆடியிருப்பார். இப்பாடல் மூலம் பிரபலமும் அடைந்தார். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்திலும் இவர் நடித்திருப்பார்.

இந்நிலையில், இவரது தாயார் கோகிலா. இவருக்கு வயது 87 ஆகும். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் அனைத்தும் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்

MUST READ