spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னது.... நடிகர் கவினுக்கு திருமணமா?......சமூக வலைதளங்களில் பரவும் மணப்பெண்ணின் புகைப்படம்!

என்னது…. நடிகர் கவினுக்கு திருமணமா?……சமூக வலைதளங்களில் பரவும் மணப்பெண்ணின் புகைப்படம்!

-

- Advertisement -

நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். அதைத் தொடர்ந்து கவினுக்கு பல பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. அந்த வகையில் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிஃப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். குறிப்பாக டாடா எனும் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கவினுக்கு ஒரு திருப்பு முறையாக அமைந்தது எனலாம்.

we-r-hiring

இதை தொடர்ந்து கவின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகின்றன. அதேசமயம் ஸ்டார் எனும் மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தை இளன் இயக்குகிறார்.

இவராக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி மோனிகா என்ற பெண்ணை கவின் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்து இருந்தன. வெளியான இந்த தகவல்களுக்கு கவினோ, கவினின் குடும்பத்தாரோ எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

தற்போது கவினுடைய வருங்கால மனைவியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கவினின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உள்ள ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது அதில் கவின் உடன் அந்தப் பெண் வீடியோ கால் பேசுவதும் அவர்தான் சந்தித்ததிலேயே மிகவும் வேடிக்கையான மனிதர் என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பெண் கவினுக்கு தோழியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்களின் திருமணம் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ