spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும்.... ஆனா எனக்கு... நடிகர் மணிகண்டன்!

எல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும்…. ஆனா எனக்கு… நடிகர் மணிகண்டன்!

-

- Advertisement -

நடிகர் மணிகண்டன் சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்து பேசியுள்ளார்.எல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும்.... ஆனா எனக்கு... நடிகர் மணிகண்டன்!தமிழ் சினிமாவில் நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர். அந்த வகையில் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் இவர் நடித்திருந்தார் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தி தந்தது. இதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் மணிகண்டன். அதன்படி இவர் ஹீரோவாக நடித்த குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதற்கிடையில் நடிகர் மணிகண்டன் புதிய படம் ஒன்றை தானே தயாரித்து நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்து பேசியுள்ளார்.எல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும்.... ஆனா எனக்கு... நடிகர் மணிகண்டன்! அதன்படி அவர் பேசியதாவது, “சினிமாவில் என்னுடைய பயணம் கஷ்டமாக இல்லை. பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த இடத்திற்கு நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா? என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நான் எதிர்பார்த்தேன் என்று சொல்வேன். அனைவருக்குமே ஷாருக்கான் மாதிரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஷாருக்கான் மாதிரி ஆக வேண்டும் என்பதற்கு என்ன செய்ய பண்ண வேண்டும் என்பதை நினைத்தால் தான் எனக்கு பயமாக இருக்கிறது. பிடித்த வேலையை செய்வதற்கு இங்கு சம்பளமும் கொடுக்கிறார்கள், விருதும் கொடுக்கிறார்கள். அப்போ எப்படி இந்த பயணம் கஷ்டமாக இருக்கும். கண்டிப்பாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ