- Advertisement -
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் வேட்டையன். இதில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா, அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 33 வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
கடந்த சில நாட்களாக படத்தில் நடித்த துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வரும் காட்சியை படக் குழு வெளியிட்டுள்ளது.