- Advertisement -
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் நுழைந்து கட்சிகளை தொடங்குகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். அவர் பல நாட்களாக அரசியலுக்கு வருவதாக தகவல் தீயாய் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அண்மையில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இக்கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து அறிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர்.

இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்திலும் விஜய் நடித்து வருகிறார். கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜய் 69-வது படத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதுதான் விஜய் நடிக்கும் இறுதி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.




