- Advertisement -
கோலிவுட்டில் சிவகார்த்திகேயன், விஜய், யோகி பாபு, சந்தானம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை நாயகனாக நடித்து பிரபலம் அடைந்தவர் சதீஷ். நகைச்சுவை நாயகனாக நடித்து வந்த சதீஷ் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. . ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

இதையடுத்து சதீஷ் நடித்த திரைப்படம் தான் வித்தைக்காரன். வெங்கி இயக்கிய இத்திரைப்படத்தில் சிம்ரன் குப்தா நாயகியாக நடிக்க, ஆனந்த் ராஜ், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், படத்திற்கு வெங்கட் பரத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
https://x.com/i/status/1796155994071867567



