- Advertisement -
நடிகர் சூரி விரைவில் சென்னையிலும் உனவகத்தை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே என அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடித்த படங்கள் ஏராளம்.
நடிகர், நடிகைகள் பெரும்பாலும் கூடுதலாக ஏதாவது ஒருதொழிலில் முதலீடு செய்வது வழக்கமாகும். ஹோட்டல் பிசினஸ், அழகு நிலையங்கள், சாப்ட்வேர் நிறுவனம்- இப்படியான தொழில்களில் தாங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் சூரியும் அவரது சொந்த ஊரான மதுரையில் பல இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ரெஸ்டாரென்ட் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை மாநகர், செல்லூர் ஒத்தக்கடை, ஊமச்சிகுளம், ஆத்திக்குளம் ஆகிய பகுதிகளில் உணவகங்கள் உள்ளன.

