spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களை அழைத்து விருந்து வைத்த நடிகர் சூர்யா.... ஏன் தெரியுமா?

ரசிகர்களை அழைத்து விருந்து வைத்த நடிகர் சூர்யா…. ஏன் தெரியுமா?

-

- Advertisement -

சூர்யா தனது ரசிகர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார்.ரசிகர்களை அழைத்து விருந்து வைத்த நடிகர் சூர்யா.... ஏன் தெரியுமா?

சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கவுள்ள புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் சூர்யா.
மேலும் கர்ணா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் இவ்வாறு பிசியாக நடித்து வரும் சூர்யா, தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.ரசிகர்களை அழைத்து விருந்து வைத்த நடிகர் சூர்யா.... ஏன் தெரியுமா?

we-r-hiring

அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு அதனால் மக்களின் இயல்பு நிலை பாதித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். அந்த வகையில் விஜய், சூர்யா, பார்த்திபன், KPY பாலா உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். அப்போது நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குவது போன்ற உதவிகளை செய்தனர்.ரசிகர்களை அழைத்து விருந்து வைத்த நடிகர் சூர்யா.... ஏன் தெரியுமா? இந்நிலையில் நடிகர் சூர்யா, தன் உயிரை பற்றி கவலைப்படாமல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த ரசிகர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்தியுள்ளார். இந்த விருந்தில் புதிதாக திருமணமான 50 ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ