Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்... கேமியோ ரோலில் இணையும் ரோலக்ஸ்...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்… கேமியோ ரோலில் இணையும் ரோலக்ஸ்…

-

- Advertisement -
ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் பிரபல நடிகர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றன. ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பென்ஸ் மற்றும் ஹண்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதில், ராகவா நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். அதுமட்டுமன்றி திரைப்படத்திற்கு அவர் திரைக்கதை எழுதியிருக்கிறார். பிரபல இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படத்தை இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ, மற்றும் கார்த்தியை வைத்து சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, பென்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ