Homeசெய்திகள்சினிமாதனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய்… ரசிகர்கள் தொண்டர்கள் கொண்டாட்டம்….

தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய்… ரசிகர்கள் தொண்டர்கள் கொண்டாட்டம்….

-

- Advertisement -

ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய், ரசிகர்கள் தொண்டர்கள் தன்னை பின்தொடர வேண்டாம் என்று பேட்டியளித்துள்ளாா்.தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய்… ரசிகர்கள் தொண்டர்கள் கொண்டாட்டம்….நடிகர் விஜய் மதுரையிலிருந்து ஜனநாயகம் படத்திற்கு படப்பிடிப்பில் பங்கு ஏற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளரிடம் கூறியதாவது, ”மதுரை உள்ள நண்பர்கள் நம்பிக்கைகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்ததோடு, நடிகர் விஜய் மேலும் கொடைக்கானலில் நடைபெற இருக்கும் ஜனநாயகம் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காகவும் மதுரை செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் மதுரையில் கட்சி சார்பில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்தில் நான் மதுரைக்கு வந்து விடுவேன் என்றும் அங்கு அனைவரையும் சந்தித்து விட்டு  எனது வேலையை பார்க்க சென்று விடுகிறேன். நீங்கள் அனைவரும் ஷேப்பாக அவரவர்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள் என்றும் தெரிவித்தார். தன்னை பின் தொடர வேண்டாம் என்றும் தெரிவித்தார். இருசக்கர வாகனத்தில் தன்னை பின் தொடர வேண்டாம் என்றும் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நின்று பின் தொடர வேண்டாம் என்றும் ஹெல்மெட் அணியாமல் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார். மேலும் இது போன்ற காட்சிகளை காண்பது மிகவும் வேதனையாக பதட்டமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். விரைவில் அனைவரையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்ததோடு அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் மற்றும் லவ் யூ ஆல் சி யூ ஆல் என்றும் தெரிவித்தார்.

‘ரெட்ரோ’ குறித்து ரிவ்யூ கொடுத்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனர்!

 

MUST READ