Homeசெய்திகள்சினிமாஅம்பேத்கர் பிறந்தநாளில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய்!

அம்பேத்கர் பிறந்தநாளில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அம்பேத்கர் பிறந்தநாளில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய்!இந்த படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நடிகர் விஜய் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அதேசமயம் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்றும் தெரிவித்திருந்தார். விஜயின் அரசியல் வருகைக்கு பொதுமக்களும் திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் அம்பேத்கரின் பிறந்தநாள் தினமான இன்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதள பக்கத்தில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகிய அனைத்தும் எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தி கோட் படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ