Homeசெய்திகள்சினிமாரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் பாய்ச்சல்... என்ன காரணம்?...

ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் பாய்ச்சல்… என்ன காரணம்?…

-

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அவர் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகா கோலிவுட் திரையுலகில் முன்னிறுத்தியது. இத்திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இறுதியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தில் ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில் வர்மா, உள்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில், இத்திரைப்படம் ரிலீஸாகும்போது பெரியளவில் சிக்கல் ஏற்பட்டதாக நடிகர் விஷால் தனியார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் உள்ள குறிப்பிட்ட நபர் ஒருவர், வேண்டும் என்றே மார்க் ஆண்டனி படத்தை தள்ளிப்போட வேண்டும் என கூறியதாக விஷால் குற்றம் சாட்டினார். மேலும், ஒரு படம் தள்ளிப்போட வேண்டும் என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. வட்டிக்கு கடன் வாங்கி, வியர்வை ரத்தம் சிந்தி படம் எடுத்தால் எளிமையாக படத்தை தள்ளிப்போட சொல்வதாக அவர் தெரிவித்தார். அந்த நபரை நான் தான் உதயநிதி ஸ்டாலினிடம் சேர்த்திவிட்டேன். அவரே இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் விஷால் ஆதங்கம் தெரிவித்தார். இதனால், படத்தின் வெளியீட்டுக்காக தயாரிப்பாளர் சுமார் 65 லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும் அவர் கூறினார்

MUST READ