Homeசெய்திகள்சினிமாவிஷால் நடிக்கும் ரத்னம்... முதல் பாடல் அப்டேட்...

விஷால் நடிக்கும் ரத்னம்… முதல் பாடல் அப்டேட்…

-

விஷால் மற்றும் பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் படத்திலிருந்து முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். செல்லமே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான அவர், சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

தற்போது விஷால் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரத்னம் படத்திலிருந்து முதல் பாடல் வெளியீட்டுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் மார்ச் 9-ம் தேதி இப்பாடல் வெளியாகிறது. விஐடி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாடல் வெளியிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

MUST READ