நடிகை அமலாபால் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சமானவர். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அமலாபாலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அமலாபால் சூர்யா, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். கடைசியாக அமலாபால், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் அமலாபால், இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரின் திருமண வாழ்வு சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்து அமலாபால் சில நாட்களில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.
#AmalaPaul Blessed with a Baby boy. Baby name is “ILAI”👶🏻❤️
— Tharani ᖇᵗк (@iam_Tharani) June 17, 2024
இந்நிலையில் அமலாபாலுக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் இருந்து அமலா பாலும் அவரது குழந்தையும் வீடு திரும்பியுள்ளனர். இருவரையும் குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அமலாபால் தாயானதற்காக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.