நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் சச்சின் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, சந்தானம், தாடிபாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். ஜான் மகேந்திரன் இந்த படத்தை இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்தும் இந்த படத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். படத்தை மட்டும் அல்லாமல் பாடல்கள், காமெடிகள் என அனைத்தையும் என்ஜாய் செய்கிறார்கள். அந்த வகையில் இப்படம் அதிக வசூல் செய்து வெற்றி நடைபோட்டு வருகிறது.
தளபதி ரசிகர்களுக்கு நன்றி கூறும் @geneliad
Thanks to our dearest Shalinii
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP #Vadivelu @iamsanthanam @bipsluvurself #ThotaTharani #VTVijayan #FEFSIVijayan @idiamondbabu @RIAZtheboss @APIfilms @dmycreationoffl @Ayngaran_offl… pic.twitter.com/oP8cse0pvv
— Kalaippuli S Thanu (@theVcreations) April 24, 2025
இது தவிர இந்த படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடித்த ரஷ்மியை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் நடிகை ஜெனிலியா, சச்சின் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “சச்சின் படத்தின் ரீ- ரிலீஸை திருவிழா போல் கொண்டாடும் தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.