spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 3' வருவதை உறுதி செய்த நடிகை ராஷ்மிகா!

‘புஷ்பா 3’ வருவதை உறுதி செய்த நடிகை ராஷ்மிகா!

-

- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 'புஷ்பா 3' வருவதை உறுதி செய்த நடிகை ராஷ்மிகா!அதன்படி இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் இவர் விஜயுடன் இணைந்து வாரிசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது தனுஷின் குபேரா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ராஷ்மிகா. தற்போது இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2- தி ரூல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. நேற்று (நவம்பர் 24) இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 'புஷ்பா 3' வருவதை உறுதி செய்த நடிகை ராஷ்மிகா!அப்போது பேசிய ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 3 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவும் எதையோ மிஸ் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன் வாழ்க்கை புஷ்பா படத்திற்கு சமம் என்று கூறிவிட்டு பாகம் 1, 2, 3 என்று கூறினார். இதன் மூலம் புஷ்பா 3 படம் உருவாகும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

MUST READ