சொர்க்கவாசல் எனும் திரைப்படமானது ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இதில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ் , சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க சித்தார்த் விஸ்வநாத இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இப்படமானது முழுக்க முழுக்க ஜெயிலில் நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன், சொர்க்கவாசல் படம் குறித்து பேசியிருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளது.
Words from Selvaraghavan about #Sorgavaasal🥵🔥
Seems another promising content based from coming in Tamil Cinema !!pic.twitter.com/YArXItEESG— AmuthaBharathi (@CinemaWithAB) November 25, 2024
அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “முழு ஸ்கிரிப்ட்டையும் ஆரம்பத்திலேயே எனக்கு கொடுத்து விட்டார்கள். அதை நான் படித்துப் பார்த்துவிட்டு ஒரு 20 முறையாவது இயக்குனரிடம் நீங்கள் தான் இதை எழுதினீர்களா? என்று கேட்டேன். இது போன்ற ஒரு ஸ்கிரிப்ட் எழுதுவது மிகவும் கஷ்டம். எனக்கு இன்னும் பொறாமையாக இருக்கிறது இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க முடியவில்லை என்று. ஜெயிலில் நடப்பது போன்று நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் இது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல படம். கடைசி வரைக்கும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும். உங்களுக்கு படத்தை பார்க்கும் போதே புரியும்” என்று தெரிவித்துள்ளார்.