- Advertisement -
சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணன் அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மலர் டீச்சராக ஒட்டுமொத்த கேரள திரையுலகையும் அசத்திய தமிழ் பெண் சாய் பல்லவி. ஊட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மருத்துவப்படிப்பை முடித்திருந்தாலும் அவரது ஆர்வம் சினிமாவின் மீது தான் இருந்தது. தாம் தூம் உள்பட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவரது புகழே ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்கு கொண்டு சென்ற கதாபாத்திரம் மலர் டீச்சர். பிரேமம் படத்தின் வெற்றி அவரை தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உயர்த்தியுள்ளது


தமிழில் கரு படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆகினார். இதையடுத்து, மாரி 2, என்ஜிகே, ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகை ஆவார். அவரது தங்கை பூஜா கண்ணனும் சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் நாயகியாக திரைக்கு அறிமுகமாகினார். தொடர்ந்து படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்



