- Advertisement -
நடிகை சமந்தா இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். விஜய் தேவரகொண்டா சமந்தா கூட்டணியில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் ‘சிட்டாடெல்’ இணைய தொடரில் நடித்து வருகிறார். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகினறன. இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருப்பதாக அண்மையில் அவர் அறிவித்திருந்தார்.
மேலும், ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் என்பவர் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் சர்வதேச படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதில் சமந்தாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வௌியானது. ஆனால், சமந்தாவால் உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், சமந்தா படத்திலிருந்து விலகவே அதில் நடிக்க பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்தார்
Sam🔥 pic.twitter.com/zrYrpeNUms
— Tolly Censor👀 (@TheTollyCensor) July 2, 2024