Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவுக்கு நடிகை சிம்ரன் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை சிம்ரன் இரங்கல்

-

- Advertisement -
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரபல தமிழ் நடிகை சிம்ரன் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகி்ச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால், அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. இருப்பினும் பலன் இல்லாம்ல அவர் இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை சிம்ரனும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். விஜயகாந்தின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கண்ணுபடப் போகுதய்யா என்ற திரைப்படத்தில் சிம்ரனும், விஜயகாந்தும் இணைந்து நடித்திருப்பர். அப்படத்தில் இடம்பெற்ற மூக்குத்தி பொட்டழகு என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ