Homeசெய்திகள்சினிமாதற்கொலை செய்யப்போகிறேன்... பிரபல நடிகை வௌியிட்ட வீடியோவால் பரபரப்பு...

தற்கொலை செய்யப்போகிறேன்… பிரபல நடிகை வௌியிட்ட வீடியோவால் பரபரப்பு…

-

பிரபல நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்யப்போவதாகவும், சீமானுக்கு எதிராகவும் விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் ப்ரண்ட்ஸ் உள்பட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்தார். மேலும் 7 முறை தன்னை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் சீமான் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், முடிந்துபோன வழக்கை மீண்டும் விசாரிக்கப்படுவதாக சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் இதனிடையே, நடிகை விஜயலட்சுமி, சீமானை தாக்கிப்பேசியும், அவருக்கு எதிராகவும் தொடர்ந்து வீடியோ வௌியிட்டு வந்தார். அந்த வகையில், இன்று தற்கொலை செய்யப்போவதாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் தான் தற்கொலை செய்யப்போவதாகவும், கர்நாடகாவில் தன்னால் வாழ முடியவில்லை என்றால் சாவு என சீமான் சொல்கிறார் என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதான் என்னுடைய கடைசி வீடியோ. இன்னும் 2 நாட்களில் நான் எப்படி சாவேன் என தெரியும். என் மரணத்தை பற்றி விளக்கம் கொடுக்க சீமானுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

MUST READ