spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇவ்வளவு மன உறுதி உள்ள ஒருத்தரை பார்க்கவே முடியாது.... அஜித் குறித்து ஆதிக்!

இவ்வளவு மன உறுதி உள்ள ஒருத்தரை பார்க்கவே முடியாது…. அஜித் குறித்து ஆதிக்!

-

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குறித்து பேசி உள்ளார்.இவ்வளவு மன உறுதி உள்ள ஒருத்தரை பார்க்கவே முடியாது.... அஜித் குறித்து ஆதிக்!

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர், குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதன்படி இப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து டீசரும் அதைத் தொடர்ந்து வெளியான OG சம்பவம் பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “இந்த படத்தில் அஜித் சாருக்கு ஒரு டான்ஸ் நம்பர் இருக்கிறது. அந்த பாடலில் அவர் மிகவும் நன்றாக டான்ஸ் ஆடுகிறார். இவ்வளவு மன உறுதி உள்ள ஒருத்தரை பார்க்கவே முடியாது.... அஜித் குறித்து ஆதிக்!எங்களுக்கு ஒவ்வொரு நாளும் FDFS தான். மேலும் குட் பேட் அக்லி ஸ்கிரிப்ட் படி, அஜித் சாரின் கேரக்டர் பெயர் ரெட் டிராகன். ஆனால் நான் ஏகே என்று சொன்னபோது அவர் ஓகே என்று சொல்லிவிட்டார். ஓகே சார் கடுமையான டயட்ல இருந்தார். இவ்வளவு மன உறுதி உள்ள ஒருத்தரை நீங்கள் பார்க்கவே முடியாது. விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து வந்த அஜித் சார், தன்னுடைய தூக்கத்திற்கு குறைந்த நேரமே ஒதுக்கி வெறும் 72 நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து தந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ