Homeசெய்திகள்சினிமாஅதிதி ராவ் நடிக்கும் புதிய படம் .... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

அதிதி ராவ் நடிக்கும் புதிய படம் …. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

அதிதி ராவ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை அதிதி ராவ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்.  இவர் தமிழில் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதனை கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காவனம் திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்க இருக்கிறார்.

ராஜேஷ் எம் செல்வா தூங்காவனம் படத்திற்கு பிறகு விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தையும் இறை என்ற வெப் தொடரையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிதி ராவ் நடிப்பில் புதிய ஒன்று படம் ஒன்றை இயக்க உள்ளார் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாக உள்ளது. படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருக்கிறது. இது குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ