Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் திரிஷா!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் திரிஷா!

-

- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு – திரிஷா இருவரும் ஜோடியாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் திரிஷா!

நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தான் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து வெளியேறுவதாகவும் பின்னர் மீண்டும் இருவரும் படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் திரிஷா!அதேசமயம் நடிகர் சிம்புவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் நடிகர் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறாராம். தேர்தலுக்குப் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருக்கிறதாம். அந்தப் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே சிம்பு – திரிஷா இருவரும் இணைந்து அலை, v விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ