Homeசெய்திகள்சினிமாநயன்தாரா, மாதவன், சித்தார்த் கூட்டணியில் இணையும் இளம் நடிகை!

நயன்தாரா, மாதவன், சித்தார்த் கூட்டணியில் இணையும் இளம் நடிகை!

-

நயன்தாரா, மாதவன், சித்தார்த் கூட்டணியில் மற்றுமொரு இளம் நடிகை இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சஷிகாந்த் புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தில் நடிகர் மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். ‘தி டெஸ்ட்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாம்.

தற்போது இந்தப் படத்தில் நடிகை ராஷி கண்ணா இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடித்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இதற்கிடையில் நடிகர் மாதவன், ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ